×

தேவர் குருபூஜையில் பங்கேற்க எதிர்ப்பு; எடப்பாடி பேனர் கிழிப்பால் பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர்நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ளார். தேவர் சமூகத்தை புறக்கணித்து வருவதால் எடப்பாடியை மரியாதை செலுத்த விட மாட்டோம் என அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2021 அதிமுக ஆட்சியின்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தார். இது தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே கடும் ெகாந்தளிப்பை ஏற்படுத்தியது. போராட்டங்களும் நடந்தது. இதன் எதிரொலியாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தென்மாவட்டங்களில் அதிமுக பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியது.

மேலும், எடப்பாடி பசும்பொன் வருகைக்காக ரத்த கையெழுத்து வேட்டையை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கியிருந்தார். ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரை, ரத்த கையெழுத்திட்டு வரவேற்பதா என பார்வர்ட் பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பசும்பொன்னிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடியை வரவேற்று தேவரின் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பசும்பொன் நுழைவாயில் தொடங்கி நினைவாலயம் வரையிலும், கமுதி – அபிராமம் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் அலங்கார வளைவில் இருந்த பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிசாமி உருவம் கிழிக்கப்பட்டது. ேநற்று காலை இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சேதமடைந்த பகுதியை நீக்கி விட்டு புதியதாக ஒட்டினர்.

The post தேவர் குருபூஜையில் பங்கேற்க எதிர்ப்பு; எடப்பாடி பேனர் கிழிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Devar ,Guru Puja ,Edappadi ,Ramanathapuram ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Muthuramalingathevarn memorial ,Pasumbon ,Kamudi ,Ramanathapuram district ,Devar Gurupuja ,
× RELATED விஜயகாந்த் குரு பூஜை: பிரேமலதா நன்றி