×
Saravana Stores

த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். த.வெ.க. கட்சி தலைவர் விஜய் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் தனது அரசியல் எதிரிகளை குறிப்பிட்டு பேசி இருந்தார். அவரது மாநாட்டு பேச்சுக்கள் தற்போது பரபரப்பாக மாறி உள்ளது. இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய்க்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே நட்புறவு உள்ளது தொடர்பான கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியர்கள் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் இடையே நட்பு இருப்பது உண்மை. ஆனால் நட்பு வேறு, அரசியல் வேறு என்றார். மேலும், தவெக தலைவர் பாசிச கட்சிகள் என கூறுவது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியையும் அவர் கூறுவது போல் உள்ளது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

The post த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Th ,. K. ,Chennai ,Th. Fri. ,Tamil Nadu Congress Committee ,Th. Fri. K. Party ,Vijay ,Mundinam ,
× RELATED த.வெ.க. மாநாட்டு திடலில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்