சென்னை : அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதால் விஜய் விமர்சிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “விஜய் தன் கருத்தை சொல்வது அவரது சுதந்திரம், அதை சரியா தவறா என விமர்சிக்க முடியாது. விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமையும்.அதிமுக சிறப்பாக செயல்படுவதால் எங்களைப் பற்றி விஜய் விமர்சிக்கவில்லை.
அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும் விஜயால் ஈர்க்க முடியாது. எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது.ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.. திமுக ஆட்சிக்கு எதிராக அதிமுக மட்டுமே குரல் கொடுத்து வந்தது. திமுக ஆட்சிக்கு எதிரான எங்கள் கருத்து வேறு இடங்களில் பிரதிபலிக்கிறது.ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விஜய் கட்சியின் கொள்கை. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற அரசியல் களத்தை மாற்ற நிறைய பேர் வந்தார்கள், எதுவும் நடக்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும் விஜய்யால் ஈர்க்க முடியாது: எடப்பாடி பழனிசாமி கருத்து appeared first on Dinakaran.