×
Saravana Stores

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

திருச்சி: ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி, போக்குவரத்து நொிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி மாநகாில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை மார்க்க வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக தற்காலிக பேருந்து நிலையம், மன்னார்புரம் சா்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனா் காமினி நேற்று துவக்கி வைத்தார்.

மேலும் போக்குவரத்து நொிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் நலன் கருதி மாநகாில் அக்.28ம் தேதி முதல் நவ.4 ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, சேவா சங்கம் பள்ளி, பென்வெல்ஸ் சாலை, அலக்ஸாண்டிரியா சாலை, சோனா மீனா தியேட்டா் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும், புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் டி.வி.எஸ்.டோல்கேட்- சுற்றுலா மாளிகை சாலை பழைய ஹவுசிங் யூனிட் இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மதுரை செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் சா்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து, திருச்சி மாநகா் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.
மற்ற வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில், எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாநகர சுற்றுப் பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படா வண்ணம் போலீசார் பாதுகாப்பும், மாநகராட்சியின் மூலம் நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல்களை தொிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்;
தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது.வியாபாாிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு வியாபாரம் செய்பவா்கள், அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வாட்ஸ்அப் 9626273399 எண்ணுக்கு தகவல் தொிவிக்கலாம். என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்தார்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Trichy ,Thanjavur ,Pudukottai ,Madurai ,Mannarpuram Choise ,Tiruchi Manaka ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!