×
Saravana Stores

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஒருநபர் ஆணையத்தில் ஆஜர்: பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கடந்த ஜூன்19ம் தேதி விஷ சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இவ்விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணைய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கடந்த 3.07.2024ல் விசாரணையை தொடங்கினார்.

தற்போது விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், எஸ்பி ரஜத்சதுர்வேதி, கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி அறிவழகன் ஆகியோர் 28ம் தேதி (நேற்று) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருநபர் ஆணைய அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி அவர்கள் 4 பேரும் நேற்று ஒருநபர் ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் ஆணைய அதிகாரி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் அலுவலகத்தில் நேற்றுடன் விசாரணை முடிந்தது. கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர், முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விசாரணை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஒருநபர் ஆணையத்தில் ஆஜர்: பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,District ,S.B. ,One Person Commission ,Villupuram CBCID police ,Kannukutty (A) Govindaraj ,
× RELATED கோமுகி நதி அணையிலிருந்து நாளை முதல் 29...