- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- அண்ணா பல்கலைக்கழகம்
- சட்டசபை
- தின மலர்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள 234 தொகுதிகளிலும் பார்வையாளர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக அறிவித்தது. 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்- நீக்கல் உள்ளிட்ட பணிகளை இந்த பார்வையாளர்கள் மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு தொகுதிகளில் பாகமுகவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று திமுகவின் 234 தொகுதி பார்வையாளர்களுடன் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிகளின் களநிலவரம், பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளின் நிலவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
The post சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.