×

சிங்கார சென்னை 2.0 வீதி விழா போட்டிகள்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளில் பங்குகொள்ள சென்னை வாசிகள் வரவேற்கப்படுகின்றனர். போட்டிகளில் பங்கேற்க பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும். அதன்படி ஸ்ட்ராவா (Strava) எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியில் நிறுவ வேண்டும்.  ஆல் ஃபார் ஸ்போர்ட்  இணையதளத்தில் உங்களுக்கான சவாலை தெரிவு செய்து பதிவு செய்ய வேண்டும்.மிதிவண்டி பயிற்சிக்கு https://www.allforsport.in/challenges/challenge/99c592c2-5fd5-11ec-9186-d34c1c4dcfa0, நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் பயிற்சிக்கு https://www.allforsport.in/challenges/challenge/f20f3ad4-5fd3-11ec-a7db-738b2a27ce13 என்ற வலைதளங்களுக்கு செல்ல வேண்டும். ஆல் ஃபார் ஸ்போர்ட் பக்கத்தோடு ஸ்ட்ராவா கணக்கை இணைத்தால், உங்கள் செயல்பாடுகள் தானியங்கி கண்காணிப்புக்கு உட்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post சிங்கார சென்னை 2.0 வீதி விழா போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Singhara Chennai 2.0 Street Festival Competitions ,Chennai ,Chennai Corporation ,Singara Chennai 2.0 Street Festival ,Singara Chennai 2.0 Street Festival Competitions ,Dinakaran ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...