- முதல் அமைச்சர்
- சென்னை
- கே. ஸ்டாலின்
- மத்திய அமைச்சர்
- மனோகர்லால் கத்தார்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- மெட்ரோ நிறுவனம்
- நந்தனை, சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த அக்டோபர்.3-ம் தேதி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் 2027-ல் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.