×
Saravana Stores

சாத்தூர் அருகே ஆட்டு தொழுவமான இ.சேவை மையம்

சாத்தூர்: சாத்தூர் அருகே ஆடு கட்டும் கூடமாக மாறிய இ.சேவை மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் அதிமுக ஆட்சியில் கடந்த 2014ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ.13 லட்சம் மதிப்பில் இ.சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இ.சேவை மையத்திற்கு தேவையான கணினி, அச்சு இயந்திரம், இண்டர்நெட் இணைப்பு மற்றும் இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்காததால் செயல்படாமல் பல வருடங்களாக பூட்டி இருந்துள்ளது.

அதன் பின் அந்த பகுதியை சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் கட்டிடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மகளிர் குழுவிற்கு புதிய கட்டிடம் வந்தால் இ.சேவை மைய கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றுவிட்டனர். இதனால் இ.சேவை மைய கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர் தனது ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகம் இ.சேவை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சாத்தூர் அருகே ஆட்டு தொழுவமான இ.சேவை மையம் appeared first on Dinakaran.

Tags : E. ,Service Center ,Chatur ,Potrettipatti ,
× RELATED பண்டிகை காலத்தை பயன்படுத்தி தள்ளுபடி...