×

மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர்

மதுரை: மதுரையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பந்தல்குடி வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அங்கு இன்னும் வெள்ளம் வடியவில்லை என மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தெரிவித்தார். 100 முதல் 150 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தண்ணீர் விரைந்து வடிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Municipal Commissioner ,Dinesh Kumar ,Bhandalkudi estuary ,Dinakaran ,
× RELATED மத்திய ஆசியா, மங்கோலியாவில் வசிக்கும்...