×

கலெக்டர் அலுவலகம் முன்பு ரேசன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட வழங்கல் அலுவலரை மாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் 961 ரேசன்கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் ரேஷன்பொருட்கள் சென்று சேர விற்பனையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு என்ற பெயரில் விற்பனையாளர்களை தரக்குறைவாக நடத்தி, அபராத தொகை விதித்து வருகிறார்.

திருச்சுழி கிடங்கில் இருந்து வரும் அரிசி மூட்டையில் 41, 43, 45 கிலோ எடையிலான மூட்டைகள் வழங்கப்படுகிறது. கிடங்கில் முறையாக ஆய்வு செய்யாமல் ரேசன்கடைகளில் மட்டும் அதிகார, அத்துமீறல் முறையில் செயல்பட்டு வருகிறார். மாவட்ட வழங்கல் அலுவலரை மாற்றம் செய்ய வேண்டுமென தெரிவித்து கோஷம் எழுப்பினர். மாவட்டம் முழுவதும் உள்ள ரேசன்கடை விற்பனையாளர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் ரேஷன் பொருட்கள் விநியோகம் நேற்று பாதிக்கப்பட்டது.

 

The post கலெக்டர் அலுவலகம் முன்பு ரேசன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rayson ,Virudhunagar ,Virudhunagar Collector's Office ,Federation of All Unions of Fair Price Workers ,Collector's Office ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் கோரி ஆமத்தூர் கிராம மக்கள் மனு