×
Saravana Stores

ஜப்பானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உச்சி மாநாடு: தமிழக மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: ஜப்பானில் நடந்த சர்வதேச உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் முதல் உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுனாமியின் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து குறைப்பு நடவடிக்கைகள், தயார்நிலையை மேற்கொள்வது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சர்வதேச உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள குமாமோட்டோ என்ற இடத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில் கடலூர் மாவட்ட மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை பிருந்தா வழிகாட்டியாக இருந்து நாகை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் சிவசக்தி, ஆந்திராவை சேர்ந்த குனராவரம் அரசு ஜூனியர் கல்லூரி மாணவன் உதயகுமார்,

அந்தமான் நிக்கோபார் அபர்தின் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் அன்சு தேவநாத், காரைக்கால் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனாவி, ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூர் கல்லிக்கோட் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஸ்ரீஅபிஷேக் சமந்தரே ஆகிய மாணவ, மாணவியரை உச்சி மாநாட்டில் பங்கேற்க வைத்தார்.

மாநாட்டில் மாணவர்கள் சுயஉதவி மற்றும் சக ஒத்துழைப்பு பேரழிவு தடுத்தல், குமாமோட்டோவில் இருந்து உலகம் மற்றும் எதிர்காலத்துக்கான பாடங்கள், இயற்கையோடு ஒன்றிணைந்த பேரழிவு ஆபத்து குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான மீள் கட்டமைத்தல் என்ற தலைப்புகளின் கீழ் 44 நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.

The post ஜப்பானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உச்சி மாநாடு: தமிழக மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : High School Student Summit in Japan ,Nadu ,Chennai ,Tamil Nadu ,India ,International High School Students Summit ,Japan ,World Tsunami Awareness Day ,Tamil Nadu Students ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...