×

கோவையில் ரூ.245 கோடியில் நூலகம், அறிவியல் மையம்: பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

ரூ.245 கோடியில் கோயம்புத்தூர் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டிடம், ரூ.114.16 கோடியில், கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடம், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.11.23 கோடியில், நீதிமன்றக் கட்டிடம் மற்றும் ரூ.14.59 கோடியில், பொள்ளாச்சி நீதிமன்றக் கட்டிடம், ரூ.59.43 கோடியில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம், ரூ.101.19 கோடியில், நாமக்கல் சட்டக் கல்லூரி கட்டிடம் மற்றும் ரூ.101.55 கோடியில்,

சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடம், திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.27.00 கோடியில், கூடுதல் கட்டிடம், ரூ.34 கோடியில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமைக் கட்டடக் கலைஞர் இளவேண்மால், கோயம்புத்தூர் மண்டலத் தலைமைப் பொறியாளர் ரங்கநாதன், சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோவையில் ரூ.245 கோடியில் நூலகம், அறிவியல் மையம்: பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Minister AV Velu ,CHENNAI ,Minister of Public Works ,Highways and ,Ports ,AV Velu ,Coimbatore Zone ,Public Works Department ,Chennai Chepakkam Public Works Forum ,Minister ,Science Center ,
× RELATED கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம்