×

தொழிற்சாலை உரிமங்களை 31ம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுரை

திருவள்ளூர்: தொழிற்சாலை உரிமங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் சி.ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை மற்றும் சென்னை மாவட்டம், மதுரவாயல் தாலுகா ஆகிய தாலுகாக்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை ஆன்லைன் மூலம் வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். அதன்படி ஆன்லைனில் படிவம் – 2 சமர்ப்பிக்கப்பட்டவுடன் புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலை உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, இந்த அதிகார வரம்பில் உள்ள அனைத்து நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என இவ்வாறு இணை இயக்குனர் கூறியுள்ளார்.

The post தொழிற்சாலை உரிமங்களை 31ம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Joint ,Industrial Safety and Health Department ,Thiruvallur District Industrial Safety and Health Department ,Joint Director ,C. Jayakumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு...