×

சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடந்தவர் தலை துண்டித்து உயிரிழப்பு

தண்டையார்பேட்டை: பெரம்பூரிலிருந்து கொருக்குப்பேட்டை வழியாக நேற்று மாலை கூட்ஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கூட்ஸ் ரயில் மோதி தலை துண்டித்தும், கை சிதைந்தும் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த ரயில்வே லைன்மேன் அருண் குமார் கொருக்குப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் சியாம் பகதூர் சிங்குக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. பச்சை கட்டம் போட்ட லுங்கி ப்ளூ கலர் சட்டை அணிந்து இருந்தார். மேலும் அந்த பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா, இவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடந்தவர் தலை துண்டித்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Perampur ,Korukuppet ,Korukuppet railway ,
× RELATED மணமகன் தன்னுடன் குடித்தனம்...