×

ஒரு மாணவன் எம்பிபிஎஸ் படிக்க அரசு ரூ.35 லட்சம் செலவழிக்கிறது: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒவ்வொரு எம்பிபிஎஸ் மாணவனுக்கும் அரசு 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ேஜ.பி நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் மருத்துவ அறிவியல் கல்லூரியின் 53வது நிறுவன தினம் மற்றும் பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா கலந்து கொண்டு பேசுகையில்,’பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் 75,000 மருத்துவ இடங்களை மேலும் அதிகரிக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஒவ்வொரு எம்.பி.பி.எஸ் மாணவருக்கும் அரசு 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது. எனவே புதிய மருத்துவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்கும்போது அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டும்’ என்றார்.

The post ஒரு மாணவன் எம்பிபிஎஸ் படிக்க அரசு ரூ.35 லட்சம் செலவழிக்கிறது: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,MBBS ,Union minister ,New Delhi ,Union Health Minister ,J.P. Nadda ,53rd foundation day ,College of Medical Sciences ,Delhi… ,Union ,Minister ,Dinakaran ,
× RELATED MBBS சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபர் கைது