×
Saravana Stores

திருநெல்வேலி மாவட்டத்தில் பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட ஆணை

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய்களின் கீழுள்ள 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 28.10.2024 முதல் 31.03.2025 வரை தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்) , நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (6000 ஏக்கர்), பாளையங்கால்வாய் (9500 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் (6410 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (12762 ஏக்கர்) , மருதூர் கீழக்கால் கால்வாய்(7785 ஏக்கர்), தெற்கு பிரதான கால்வாய் (12760 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (12800 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் பாசன வசதி பெறும்.

The post திருநெல்வேலி மாவட்டத்தில் பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட ஆணை appeared first on Dinakaran.

Tags : Tirunelveli district ,Chennai ,Northern Summer Melazagian Canal ,Thamiraparani River ,South Summer Allagian Canal ,Nadiyunni Canal ,Kannadian Canal ,Kodakan Canal ,Palayangalwai ,Tirunelveli Canal ,Marathur Malakkal Canal ,Kalwai ,Tutickudi District ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் 2...