×

கிளாம்பாக்கம் அருகே கார் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து

தாம்பரம்: கிளாம்பாக்கம் அருகே கார் பழுது பார்க்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 கார்கள் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில், கார்கள் பழுது பார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கடையில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு துறைக்கும், கிளாம்பாக்கம் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கடையில் பழுதுபார்க்க நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிளாம்பாக்கம் அருகே கார் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,Tambaram ,Klampakkam ,GST Road ,Glampakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்