- திருபுரா பெண்கள் மீட்பு
- சென்னை
- அருண்
- மத்திய குற்றப் பிரிவு
- சென்னை பெருநகர போலீஸ்
- உதவி ஆணையாளர்
- ராஜலட்சுமி
- குற்றத் தடுப்புப் பிரிவு
சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர், பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜென்டுகளை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒக்கியம் துரைப்பாக்கம் குமரன் குடில் 6வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக குடியிருப்புவாசிகளிடம் இருந்து புகார்கள் வந்தது. அதன்படி விபசார தடுப்பு பிரிவு -2 இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், கரூர் மாவட்டம் எடயப்பட்டி பகுதியை சேர்ந்த மலையாண்டி (29) என்பவர், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், மலையாண்டி வடமாநில பாலியல் ஏஜென்டுகளுடன் தொடர்பு வைத்து கொண்டு இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக மலையாண்டியை கைது செய்தனர். அவனிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 2 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
The post ஐடி ஊழியர்களை குறிவைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் பிடிபட்டார்: திரிபுரா இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.