×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

சென்னை: புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் பெரம்பூர் வருவாய் ஆய்வாளர் நிர்மலா தேவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் ஆய்வில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் மணல் இருப்பது தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த முகேஷ் மற்றும் மணலை ஏற்றி அனுப்பிய தனியார் டிரேடர்ஸ் உரிமையாளர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28) ஆகிய இருவர் மற்றும் லாரியை வருவாய்த் துறையினர், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புளியந்தோப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perampur Revenue ,Nirmala Devi ,Pulianthopu Ambedkar College Road ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...