×

புகையிலை விற்றவர் கைது

போடி, அக். 25: தேனி மாவட்டம், போடியில் நகர் காவல் நிலைய எஸ்ஐ விஜயராமன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி பஸ் நிலையத்திற்குள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கூல் லிப் ஆகியவற்றை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து கடையிலிந்த 20க்கும் மேற்பட்ட புகையிலை மற்றும் கூல் லிப் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் கடை உரிமையாளரான போடி அருகே மேலசொக்கநாதபுரம் காந்திஜி காலனியை சேர்ந்த காமாட்சி மகன் மகேஸ்வரன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bodi ,SI Vijayaraman ,Bodi City Police Station ,Theni District ,Bodi bus ,Dinakaran ,
× RELATED போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி...