×
Saravana Stores

‘திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.2,000 கட்டணமா?’

மதுரை: ‘திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘சுவாமி தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய், ரூ.2 ஆயிரம் என கட்டணம் வசூலித்தால், ஏழைகள் எவ்வாறு தரிசனம் செய்ய முடியும்? ஏன் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா’’ என்றனர். பின்னர் மனுவிற்கு, அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

The post ‘திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.2,000 கட்டணமா?’ appeared first on Dinakaran.

Tags : Swami ,Thiruchendur ,Madurai ,Tiruchendur ,ICourt ,Swami Darshan ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...