×

வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக கூட்டணியில் விரிசலுக்கு வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

திருச்சி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுத்தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வலிமையாகவும், உறுதியாகவும் இருக்கிறது. எங்கள் கூட்டணியில் விரிசல் வருவதற்கு வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி குறித்து எச்.ராஜா பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை விட்டு விட்டு படித்தவர்களை தான் சீமான் விமர்சிக்க வேண்டும். அவர்களை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை தாக்குவது சரியில்லை. அவருடைய போக்கு அப்படி தான். அப்படிதான் அவர் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

The post வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக கூட்டணியில் விரிசலுக்கு வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu Congress Committee ,Public Accounts Committee ,Tamil Nadu Legislature ,Trichy Cantonment ,Nair ,Wealthman ,Dimuka ,Wealth ,Dinakaran ,
× RELATED அனைத்து உழவர்களுக்கும் தேசிய...