×

மாமன்னன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் வித்தியாசமான தோற்றத்தில் வடிவேலு

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த படத்தின் போஸ்டரில் வடிவேலு கையில் துப்பாக்கியும், உதயநிதி கையில் வாளும் இருப்பதை பார்க்கும்போது வடிவேலுக்கு கதையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வருகிறது. அவர் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாமன்னன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் வித்தியாசமான தோற்றத்தில் வடிவேலு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி