×
Saravana Stores

மேட்டுப்பாளையத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை : கூண்டை இடமாற்றம் செய்ய வனத்துறை திட்டம்

Mettupalayam. Cage, forest Departmentமேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான்,காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் வசித்து வரும் ருக்குமணி (60) என்பவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு நாயை கட்டிவிட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் நாயின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது வீட்டில் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை ஒன்று கவ்விக்கொண்டு புதர் வழியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜூக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சிறுதையின் கால் தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் வெள்ளிப்பாளையம் சாலையில் கருப்பராயன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அறிந்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்தி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அறிவொளி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில்,“கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள கருப்புராயன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று காலை அறிவொளி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததன் பேரில் அங்கும் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கருப்பராயன் கோவில் அருகே கூண்டு வைத்துள்ளதை அறிந்த சிறுத்தை அறிவொளி நகர் பகுதிக்கு வந்திருக்கலாம். எனவே, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தை கூண்டை இடமாற்றம் செய்து அறிவொளி நகர் பகுதியில் வைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை : கூண்டை இடமாற்றம் செய்ய வனத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Métuppalayam ,Little Forest ,Maattupalayam ,Forest Department ,
× RELATED தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு...