×
Saravana Stores

சாத்தனூர் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர் மழையால்

தண்டராம்பட்டு,அக்.24: தொடர் மழையால் சாத்தனூர் அணையில் 108 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும் பொன்விழா கண்ட இந்த ஆனை 119 அடி உயரம் கொண்டது. விவசாய பாசனத்திற்காக வலது இடது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 90 அடியாக நீர்மட்டம் குறைந்தது.கிருஷ்ணகிரி கே ஆர் எஸ் அணை சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வினாடிக்கு 3340 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது இதனால் சாத்தனூர் அணை 108 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக சுழற்சிமுறையில் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கண்காணித்து வருகின்றனர். சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக என் நேரத்திலும் உபரி நீர் வெளியேற்ற படலாம் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் வருவாய்த் துறையினர் கரையோரம் உள்ள கிராமங்களில் தண்டோர மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.

The post சாத்தனூர் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர் மழையால் appeared first on Dinakaran.

Tags : Chatanur dam ,Thandarampatu ,Tiruvannamalai district ,
× RELATED விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்