×

மெக்டொனால்டு பர்கரில் ஈகோலி பாக்டீரியா அமெரிக்காவில் ஒருவர் பலி: 49 பேருக்கு சிகிச்சை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஈகோலி பாக்டீயா பரவி வருகிறது. செப்.27 முதல் அக்.11 வரை 49 பேர் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் குவார்ட்டர் பவுண்டர் என்ற பர்கர் உணவை சாப்பிட்டதால் ஈகோலி பாக்டீரியா பரவியது தெரிய வந்துள்ளது. இதில் கொலராடோ மாகாணத்தில் ஒருவர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணையில் குவார்ட்டர் பவுண்டரில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மூலமாக இது பரவி இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது. இதனால் மெக்டொனால்டு நிறுவனத்தின் பங்குகள் வேகமாக சரிந்தன. இதையடுத்து மெக்டொனால்டு நிறுவன உணவு தயாரிப்பில் இருந்து குவார்ட்டர் பவுண்டர் நீக்கப்பட்டுள்ளது.

The post மெக்டொனால்டு பர்கரில் ஈகோலி பாக்டீரியா அமெரிக்காவில் ஒருவர் பலி: 49 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : McDonald ,Washington ,America ,McDonald's ,Quarter Pounder ,Dinakaran ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு...