×
Saravana Stores

நாடாளுமன்ற குழு முன்பாக செபி தலைவர் இன்று ஆஜர்: ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச் இன்று நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகிறார். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதபி புரி புச் மற்றும் அவரது கணவரும் இணைந்து, அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் ஏராளமான பங்குகளை வைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதற்காகவே அதானிக்கு எதிரான விசாரணையை செபி தீவிரமாக நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை மாதபி புச் மறுத்துள்ளார். அரசியல் ரீதியாக பெறும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாதபி புச்சுக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு கடந்த 5ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, நாடாளுமன்ற குழு முன்பாக மாதபி புச் இன்று ஆஜராக உள்ளார். ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து மாதபி குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்த சூழலில் மாதபி புச் நேரில் ஆஜராக இருப்பதால் இன்று கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற குழு முன்பாக செபி தலைவர் இன்று ஆஜர்: ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : SEBI ,Parliamentary Committee ,Hindenburg ,New Delhi ,Madhabi Puri Buch ,Parliament's Public Accounts Committee ,Securities and Exchange Board of India ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை: ஜேபிசி தலைவர் விளக்கம்