×
Saravana Stores

பெங்களூருவில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரும் பலியாகினர்

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு, கே.ஆர்.புரம் பாபுசாப் பாளையத்தில் 7 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தொடர் மழை பெய்து ஈரத்தன்மை அதிகம் இருந்த நிலையில் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய அர்மான்(26) சம்பவ இடத்திலும், திரிபால் (35),முகமது ஷகில் (19), சத்யராஜ் (25), சங்கர் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும் ஜகதேவி (45), ரஷித் (28) நாகராஜ்(25) ரமேஷ்குார் (28) அஜய், ஹர்மான் (22) உள்ளிட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஏழுமலை, கட்டிட பணிகளுக்காக நான்கைந்து பேர்களை அழைத்து வந்துள்ளார். அவர்களில் சத்யராஜ் மற்றும் சங்கர் இறந்த நிலையில் மணிகண்டன், கஜேந்திரன் உள்ளிட்ட நபர்களை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் முனிராஜ்ரெட்டி, மோகன்ரெட்டி, ஏழுமலை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பெங்களூருவில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரும் பலியாகினர் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Tamil Nadu ,Bangalore, K. R. ,Puram Babusab Camp ,
× RELATED பெங்களூருவில் கனமழை; கட்டடம் இடிந்து 7 பேர் பலி!!