×
Saravana Stores

வாக்காளர் பட்டியல் வெளியாகும்நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, புதிதாக குடியேறியவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இருந்து மாறியவர்கள், புதிதாக திருமணமாகி சென்றவர்கள், புதிதாக வந்தவர்கள், இறந்தவர்கள் என்பது போன்ற விவரங்களை பெற்று, அவற்றை உரிய செயலியில் பதிவு செய்வார்கள். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 29ம் தேதி (ெசவ்வாய்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை செயலாளர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

The post வாக்காளர் பட்டியல் வெளியாகும்நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Tamil Nadu ,CHENNAI ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்...