×
Saravana Stores

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கண்மாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது.

புலிகள் காப்பக பகுதியான இந்த வனப்பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மலையடிவாரப் பகுதிகளில் நீரோடைகளில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் மற்றும் வேப்பங்குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும். இது பாசன விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தார்.

The post மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Srivilliputhur ,Kanmai ,Chenbagathoppu Forest ,Virudhunagar district ,Tiger ,
× RELATED குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி