சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.