×
Saravana Stores

விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் காய்கறி மாலை அணிந்து, தண்ணீரில் சமைத்து போராட்டம்

 

திருப்பூர், அக்.23: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நேற்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாதர் சங்கத்தினர் மண் சட்டியில் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் ஊற்றி களிமண்ணை வறுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்திருந்தனர்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், இதனால், ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை குறிக்கும் வகையில் ஒப்பாரி வைத்தனர். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தின் தெற்கு நகர செயலாளர் பானுமதி, தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்ட துணை தலைவர் ஷகிலா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

The post விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் காய்கறி மாலை அணிந்து, தண்ணீரில் சமைத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Matar Sanghath ,Tiruppur ,All India Democratic Mother Association ,Tiruppur Municipal Office ,Saraswati ,Matar ,Sanghats ,Dinakaran ,
× RELATED வளர்ச்சியடையும் பின்னலாடை துறை தொழில்துறையினர் கோரிக்கை நிறைவேறுமா?