- உலக அயோடின் தின விழிப்புணர்வு
- மஞ்சூர் அரசு பெண்கள் பள்ளி
- Manjoor
- உலக அயோடின் தினம்
- அரசு பெண்கள் பள்ளி
- மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- தின மலர்
மஞ்சூர், அக்.23: மஞ்சூரில் அரசு மகளிர் பள்ளியில் உலக அயோடின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் உலக அயோடின் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை பாபி தலைமை தாங்கினார். ஆசிரியை கிரன் அயோடின் கலந்த உப்பு உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.
பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர்கள் கலந்து கொண்டு உப்பில் உள்ள அயோடினை எவ்வாறு கண்டறிவது. அயோடின் என்பது சிறிய நுண்ணூட்டச்சத்து. சிறிய அளவே போதுமானது என்றாலும் உடலில் பெரிய, பெரிய வேலைகளை செய்கிறது. தைராய்டு ஹார்மோன்களை உருவாக்க உடலுக்கு அயோடின் அவசியம் தேவை. உடலால் இதை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் உண்ணும் உணவின் மூலம் இதை பெற முடியும் என்பது உள்பட அயோடின் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர். இதில் ஆசிரியைகள், மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மஞ்சூர் அரசு மகளிர் பள்ளியில் உலக அயோடின் தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.