×

கிணற்றில் தொழிலாளி சடலமாக மீட்பு

பெரம்பலூர், அக்.23: பெரம்பலூர் அருகே சத்திர மனை கிராமம், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம்(50); கிணறு வெட்டும் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தனக்கு சொந்தமான வயல் காட்டில் இரவில் தங்கி வந்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் வயலுக்கு சென்றவர், நேற்று காலை வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது மகன் விஷ்ணு வயலுக்கு சென்று தேடியபோது அங்கிருந்த கிணற்றில் சிதம்பரம் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிடந்த சிதம்பரத்தின் உடலை மீட்டனர். பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிணற்றில் தொழிலாளி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,CHIDAMBARAM ,CHITRA ,MANI VILLAGE ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...