×

அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் பேரிடர் கால ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, அக். 23: அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தற்போது வடகிழக்கு பருவ தொடர் மழை காரணமாக ஆறுகளில வெள்ள அபாயம் உள்ளது.

இது போன்ற போடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடந்தது. கல்லூரி, மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தீயனைப்பு வீரர்கள், பல்வேறு நிலைகளில் எவ்வாறு பேரிடரை எதிர்கொள்வது என்று மாதிரி செயல் விளக்களித்தனர்.

The post அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் பேரிடர் கால ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Aravakurichi Government College ,Aravakurichi ,Aravakurichi Fire and Rescue Department ,Northeast Monsoon ,Government College of Arts and Science ,Dinakaran ,
× RELATED பள்ளபட்டியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது