×

மாநகர பேருந்து மோதி ஆட்டோ நொறுங்கியது: பயணிகள் படுகாயம்

பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகரில் நேற்று மதியம் ஆட்டோ ஒன்று பயணிகளுடன் எம்கேபி நகர் நார்த் அவென்யூ சாலை வழியாக அம்பேத்கர் கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, காரனோடையில் இருந்து பூக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து (தடம் எண் 57 எச்) கட்டுப்பாட்டை இழந்து இந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அஜித் (28) மற்றும் அவருடன் வந்த பயணி ஒருவர் காயமடைந்தனர்.

மேலும் ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மற்றொரு ஆட்டோ என இரண்டும் சேதமடைந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மாநகர பேருந்து மோதி ஆட்டோ நொறுங்கியது: பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vyasarpadi MKP Nagar ,Ambedkar College Road ,MKP Nagar North Avenue Road ,Karanodai ,
× RELATED தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக...