×

புதுகை அருகே பாதுகாப்பு படையினர் பயிற்சியில் துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து சிறுவன் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் காவல்துறையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. சிறிய மலைப்பகுதிகளை கொண்ட இந்த இடத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் இந்த பயிற்சி தளம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை, திருச்சி விமானநிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தஞ்சாவூர் விமானப்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணியளவில் 34 போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது 9 மணியளவில் இந்த தளத்துக்கு அருகே 2 கிமீ தொலைவிலுள்ள குடிசை வீட்டில் விளையாடி கொண்டிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி (11) தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் சுருண்டு விழுந்த சிறுவனை, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை இங்கிருந்து அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள், நார்த்தாமலையில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த இலுப்பூர் ஆர்டிஓ தண்டாயுதபாணி மற்றும் போலீசார் வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதற்கிடையே பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளம் செயல்படுவதை  தற்காலிகமாக தடை செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு செய்தார்….

The post புதுகை அருகே பாதுகாப்பு படையினர் பயிற்சியில் துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pudugai ,Pudukottai ,Pasumalaipatti ,Northamalai ,Puducherry ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு...