×
Saravana Stores

கிருஷ்ணா கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவு

சென்னை: திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில், ஈக்காடு அருகில் கிருஷ்ணா கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவுவுகளால் பூண்டி நீர் கெட்டுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும். இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி நீர்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கு சேகரிக்கப்படும் குடிநீரை புழல் ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் – செங்குன்றம் சாலை, ஈக்காடு அருகில் கால்வாயை ஒட்டியுள்ள இடத்தில், சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலரும், கால்வாய் அருகில் குப்பை கொட்டும் இடமாக அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், காற்றில் பறக்கும் இறைச்சி கழிவு மற்றும் குப்பை, கால்வாயில் விழுந்து விடுகிறது. இதனால், சென்னைக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் அசுத்தமடைந்து வருகிறது. எனவே, கிருஷ்ணா கால்வாய் அருகில் இறைச்சி கழிவு மற்றும் குப்பை கொட்டுவதை, நீர்வள ஆதாரத்துறையினர் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணா கால்வாயில் கொட்டப்படும் இறைச்சி கழிவு appeared first on Dinakaran.

Tags : Krishna canal ,CHENNAI ,Ekkadu ,Tiruvallur-Senggunram road ,Bundi ,Bundi Sathyamurthy Reservoir ,
× RELATED திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில்...