×

2 பாகங்களாக உருவாகும் ‘கங்குவா’

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கங்குவா’. 3டி தொழில்நுட்பத்தில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகிறது. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ஆனந்தராஜ் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் இப்படம், 2 பாகங்களாக உருவாக்கப்படுகிறது என்றும், முதல் பாகத்தின் கிளைமாக்சில் 2ம் பாகத்துக்கான தொடக்கம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் நவம்பரில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து, அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் முதல் பாகம் திரைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

The post 2 பாகங்களாக உருவாகும் ‘கங்குவா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Shiva ,Surya ,Studio Green ,UK Creations ,Bollywood ,Disha Bathani ,Yogi Babu ,Anandraj ,Devisri Prasad Music ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி