×

பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், தனது மனைவி சாந்தியுடன் நேற்று வெளியில் சென்றிருந்தார். அப்போது, இவரது மகள் மங்கையர்கரசி கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தபோது நேற்று மாலை திடீரென வீட்டிற்குள் நுழைந்த குடுகுடுப்பக்காரன் போன்ற வேடமணிந்த வந்த மர்ம நபர், மங்கையர்க்கரசியின் முகத்தில் ஸ்பிரே அடித்ததில், அவர் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், மர்ம நபர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து, மாறுவேடத்தில் வந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். நேற்று மதியம் செல்வமும் அவரது மகள் மங்கையர்கரசி யும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.70 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு சென்று அந்தப் பணத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்ததால், மாறுவேடத்தில் வந்த கொள்ளையன் பீரோவை மட்டும் குறிவைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றதால் 70 ஆயிரம் பணம் தப்பியது.

The post பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Trincomalee ,Pandur Adiravidar ,Thiruporur ,Alathur ,Shanti ,Mangaiyarkarasi ,Dinakaran ,
× RELATED பீரோவில் பணம் இல்லாததால் விரக்தி அரசு...