- Durwari
- திரிபுரசுந்தரி உத்தனூரை இலாவபுரீஸ்வரர் கோயில்
- விளாங்காடுபாக்கம்
- செங்குன்றம்
- இந்து சமய அறநெறிகள் துறை
புழல்: செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரிபுரசுந்தரி உடனுறை இலவபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த, கோயிலுக்குச் சொந்தமான திரிக்குளம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அருகே உள்ளது. இக்கோயில் குளம் முழுவதும் பராமரிப்பின்றி செடி கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரை வளர்ந்து தண்ணீர் இல்லாததுபோல் காட்சியளிக்கிறது. மேலும், திருக்குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் தடுப்பு வேலிகளும் இல்லை.
இதனால், இச்சாலை வழி வளைவில் திரும்பிச் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனத்துடன் குளத்தில் நிலை தடுமாறி தவறி விழும் சூழ்நிலை உருவாகும். எனவே, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் உதவி ஆணையர், உரிய நடவடிக்கை எடுத்து திரிக்குளம் முழுவதும் உள்ள செடி கொடிகளை அகற்றி, குளத்தை தூர்வாரி சீரமைத்து குளத்தை சுற்றி தடுப்பு சுவர்கள் அல்லது தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம பகுதி மக்கள் கூறுகையில், இந்த குளத்தை தூர்வாரி, தடுப்புச் சுவர்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், தனி நபர்கள் குளத்தில் செம்மண்ணைக் கொட்டி குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக விற்பனை செய்துவிடுவர். எனவே, சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post பராமரிப்பின்றி பாசிபடர்ந்த கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.