பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே அம்மன் கோயிலில் திருட முயன்ற முகமூடி திருடர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் கிராமத்தில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான செண்பக நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று மாலை சமுதாய மக்கள் கூட்டம் நடத்த கோயிலுக்கு சென்றனர். அப்போது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு விளக்குகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. கோயிலுக்கு சொந்தமான ஆவணங்கள் அடங்கிய லாக்கர் பெட்டி இருந்த இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் கிடந்தது.
அருகில் ெசன்று பார்த்தபோது அதன் பூட்டு உடைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் கோயில் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்து லாக்கர் பெட்டியை உடைக்க முயல்வதும், லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்து திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஊர் தலைவர் ஹரிகுமார் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி அணிந்து கொண்டு கோயிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட முயன்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
The post பூதப்பாண்டி அருகே அம்மன் கோயிலில் திருட்டு முயற்சி: முகமூடி அணிந்து வந்த 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.