காங்குப்பம் மகாதேவர் மலை கோயில்
உலகில் இறைசக்தி ஒன்று கண்டுபிடிக்க படவில்லை எனில் மானுடத்திற்கு தீர்வு என்பதே இல்லை. தீர்வுகள் தரும் தேவதைகளாக உயர்ந்து நிற்கின்றன கோயில்கள். ஒவ்வொருவரும் நமது பிரச்னை என்ன? நமக்கு எந்த ஸ்தலத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று ஆய்ந்தறிந்து செல்வதே அறிவு. எல்லா ஸ்தலங்களும் எல்லோருக்கும் இல்லை. இயற்கை நமக்கு தந்த பேரறிவால் சிந்தித்து நமக்கு விடையளிக்கும் ஸ்தலங்களை நோக்கி பயணிப்பதே சிறந்த ஞானமாகும். அவ்வாறே, இந்த ஸ்தலத்தை காண்போம்.வேலூர் அடுத்து காங்குப்பம் என்னும் கிராமத்தில் மகாதேவர் மலை கோயிலில் மகாதேவ சுவாமியாக சிவபெருமான் எல்லோருக்கும் அருள்புரிகிறார்.
இந்நஸ்தலம் 1600 வருடங்களுக்கு முன்னால் சுயம்புவாக தோன்றி லிங்கம் என்று சொல்லப்படுகிறது. பானத்ைதயும் ஆவுடையாரையும் இணைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 600க்கு முன்பு கிருஷ்ண தேவராயர் இந்த கோயிலை கட்டியதாக வரலாறு சொல்கிறது. இக்கோயில் ராஜகோபுரம் ஒட்டி அமைந்துள்ள தீர்த்த குளத்தில் பெரியதும் சிறியதுமாக இரண்டு கால்தடம் உள்ளது. இந்த கால்தடமானது மகாதேவரும் காமாட்சி ஒன்றாக காட்சி கொடுத்துள்ளனர். இது ஆணும் பெண்ணும் ஒன்றுதான் என்ற அர்த்தநாரீத் தத்துவத்தின் சொல்கிறது. இந்த கால்தடத்தை கணவன் – மனைவி சமேதமாக வந்து வணங்கிச் சென்றால் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று இன்றளவும் நம்பப்படுகிறது.
மக்களும் வழிபட்டு வருகின்றனர்.மகாதேவர் என்ற இந்த சுவாமிக்கு வியாழ பகவானும் காமாட்சிஅம்மன் என்ற அம்பாளுக்கு சுக்ரன் மற்றும் சனியும் பெயர் நாமங்களை கொடுத்து அழங்கரிக்கிறது.மேஷ ராசியிலோ அல்லது துலாம் ராசியிலோ வியாழன், சனி மற்றும் சுக்ரன் இருந்து தொடர்பு ஏற்பட்டால் இக் கோயிலுக்கு வந்து இனிப்பு நெய்வேத்தியமாக கொடுத்து வழிபாடு செய்து பின் அங்கு வருபவர்களுக்கு விநியோகம் செய்து வீட்டிற்கும் கொண்டு வந்தால் அவர்களுக்கு கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாகும்.தீர்த்தத்தின் அருகே இருக்கும் பாதச்சுவடுகளுக்கு நல்லெண்ணெய் அபிேஷகம் செய்து வழிபட்டால் விவாகரத்து வரை சென்ற ஒரு தம்பதியர் திரும்பவும் கைகூடும் பாக்கியம் உண்டாகும்.
கல்யாணம் நடவாத ஆண்கள் இங்கு வந்து பெண் குழந்ைதகளுக்கு இனிப்புடன் ஆடை வாங்கி தந்தால் திருமணம் கைகூடும். கல்யாணம் நடக்காத பெண்கள் இங்குவந்து ஆண் குழந்தைகளுக்கு இனிப்புடன் ஆடை வாங்கித்தந்தால் விரைவில் திருமணம் கைகூடும் வாய்ப்புகள் உண்டாகும்.தொடர்ந்து ஒன்பது பௌர்ணமி சுவாமிக்கு நல்லெண்ணெய் மற்றும் மழைநீரை அபிஷேகம் செய்துவந்தால், அரசியலில் பெரிய வெற்றிகள் உண்டாகும். ஏகாதசி திதி அன்று கணவன் அல்லது மனைவி இங்கு வந்து பசுவிற்கு உணவளித்தால் அவர்களின் ஒற்றுமை மேலோங்கும் வீட்டில் லெட்சுமி கடாட்சம் கைகூடும். இந்த திருத்தலம் கணவன் மனைவி ஒற்றுமைக்கு சிறந்த ஸ்தலமாகும்.
எப்படிச் செல்வது?
காட்பாடியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் குடியாத்தத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது காங்குப்பம். காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழைய கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் வந்து வடக்கே 5 கி.மீட்டர் துாரம் பயணித்தால் மகாதேவ மலையை அடையலாம்.
ஜோதிடர் திருநாவுக்கரசு
The post கிரகங்களே தெய்வங்களாக appeared first on Dinakaran.