×

நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விஸ்வகர்மா என்பது குலத்தொழில் இல்லை எனவும் விஸ்வகர்மாவில் 18 தொழில்காரர்களை சேர்ப்பதாகவும் கூறினார். இதனை கண்டித்தும் விஸ்வகர்மா சமுதாயத்தை பற்றி அவர் பேசிய கருத்துக்களை திரும்ப பெற வலியுறுத்தியும் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விஸ்வகர்மா ஐந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Virudhunagar ,Union Finance Minister ,Coimbatore ,Vishwakarma ,Dinakaran ,
× RELATED பட்ஜெட் குறித்து ஆலோசனை; பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு