நாமக்கல்: ‘நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட்டு, புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்குவோம்’ என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட்டு, புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும். தமிழகத்தில், உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திருமாவளவனின், முதல்வராகும் கனவு பலிக்காது என ஒன்றிய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தமிழக முதல்வராக வருவதை நான் வரவேற்கிறேன்.
அவருக்கு அதற்கான தகுதி உள்ளது. ஒரு தமிழனாக, தம்பியாக அவர் முதல்வர் ஆவதில் நான் பெருமைப்படுகிறேன். முதல்வராக திருமாவளவன் வரக்கூடாது என சொல்ல முருகன் யார்?. நாங்கள் உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
The post நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.