மஞ்சூர், அக்.21: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தேனாடு, கிட்டட்டி மட்டம். நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட பலவகையிலான மலைகாய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடிங்கி பெரும் நாசம் செய்து வருவதுடன் இப்பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது இப்பகுதி பொதுமக்களை கடும் அதிருப்திகுள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தேனாடு மற்றும் கிட்டட்டி மட்டம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து தொலைதூரமுள்ள வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேனாடு பகுதியில் குரங்குகள் அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.