×
Saravana Stores

பூமியின் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் மரக்கன்று நடும் விழாவில் வேண்டுகோள்

 

ஊட்டி, அக். 21: பூமியின் பசுமை பரப்பை அதிகரிப்பது ஒன்று தான், காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த உள்ள ஒரே வழி என ஊட்டியில் அரசு கலை கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை முன்னெடுத்துள்ள காலநிலை மீட்டெடுத்தல் – பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் கீழ் ஊட்டி அரசு கலை கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடந்தது. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொண்டு பூமியை காக்க அனைத்து முயற்சிகளையும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கல்லூரி மைதானத்தில் மரக்கன்றுகள் நடடும் பணிகளை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, பூமியின் பசுமை பரப்பை அதிகரிப்பது ஒன்று தான், காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த உள்ள ஒரே வழி என்றார்.

செஞ்சிலுவை சங்க தலைவர் கேப்டன் மணி மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற அலுவலர் ஸ்வாதி, செஞ்சிலுவை சங்க செயலாளர் குரூஸ், சுற்றுசூழல் மன்ற பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாசிரியர் அஸ்வின், தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரீன் வாரியர்கள் குழுவின் நீலகிரி மாவட்ட உறுப்பினர்கள் சமுதாய கல்லூரி முதல்வர் லெனின் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். முடிவில் அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ராஜூ நன்றி கூறினார்.

The post பூமியின் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் மரக்கன்று நடும் விழாவில் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : earth ,Ooty ,Government ,Arts ,College ,Tamil Nadu Green Movement ,Nilgiris ,Dinakaran ,
× RELATED அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!