×

நாளை தேசிய காவலர் தினம்: செங்கை பத்மநாதன் அறிக்கை

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை (21ம்தேதி) தேசிய காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது உடமைகளையும், உயிரையும், சட்டம்-ஒழுங்கையும் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு பேட்ச் அணிந்து சல்யூட் செய்யவேண்டும்.

வீரவணக்க நாளன்று மக்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக பல ஆண்டுகளாக மனித உரிமை, மனித சங்கிலி இயக்கம் மற்றும் நமதுரிமை காக்கும் கட்சி சார்பில் காவலர்களின் துயரத்தில் பங்கேற்று அவர்களுக்கு உறுதுணையாக இருக்க அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி யுள்ளார்.

The post நாளை தேசிய காவலர் தினம்: செங்கை பத்மநாதன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : National Guard Day ,Sengai ,CHENNAI ,General Secretary ,Senkai Padmanaban ,
× RELATED செங்கை, காஞ்சியில் மிதமான மழை