×

சேலத்தில் இன்று திமுக இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெறுகிறது. திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திறக்கப்படாமல் இருக்கும் கலைஞர் நூலகங்களை திறப்பது, என் உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா, இளைஞர் அணியின் சமூக வலைத்தளப்பயிற்சி, ஒன்றிய-நகர-பகுதி- பேரூர்களுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தல் உள்ளிட்ட இளைஞர் அணியின் பல்வேறு பணிகள் குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளோம்.

இந்த ஆலோசனை கூட்டம் 20ம் தேதி(இன்று) மாலை 4 மணியளவில் சேலம் வெள்ளக்கல்பட்டி கரூப்பூர் பிரதான சாலையில் உள்ள தீர்த்தமலை திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சேலத்தில் இன்று திமுக இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK youth team ,Salem ,CHENNAI ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்